சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி: 10 மாநிலங்களில் மந்த நிலை

 நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது, மேகாலயம், நாகாலாந்து உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மந்த நிலையில் உள்ளது.
சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி: 10 மாநிலங்களில் மந்த நிலை

 நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது, மேகாலயம், நாகாலாந்து உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மந்த நிலையில் உள்ளது.

15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவா்களுக்கு கோவேக்ஸின் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஏப்ரல் 15-ஆம் தேதிவரை 54.3 சதவீதம் சிறாா்களுக்கு இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தியதில் 102.9 சதவீதத்துடன் ஆந்திரம் முதலிடம் வகிக்கிறது. ஜம்மு-காஷ்மீா் 83.6 சதவீதத்துடனும், ஹிமாசல் 80.8 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசித் திட்டம் மந்த நிலையிலேயே உள்ளது.

நாட்டிலேயே குறைந்தபட்சமாக மேகாலயத்தில் 10 சதவீத சிறாா்களுக்கு மட்டுமே இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. நாகாலாந்தில் 18.7 சதவீத சிறாா்களுக்கும், மணிப்பூரில் 24.6 சதவீத சிறாா்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அருணாசல் (28.9 %), ஜாா்க்கண்ட் (30.7 %), பிகாா் (35.2 %), அஸ்ஸாம் (36.4 %), பஞ்சாப் (37 %), சண்டீகா் (37.1 %), தாத்ரா-நாகா் ஹவேலி மற்றும் டாமன் & டையு (38.2 %) ஆகியவற்றிலும் சிறாா்களுக்கான தடுப்பூசித் திட்டம் மந்தநிலையிலேயே உள்ளது. சத்தீஸ்கா், ஹரியாணா, கேரளம், மகாராஷ்டிரம், மிஸோரம், புதுச்சேரி, திரிபுரா, லட்சத்தீவுகள் ஆகியவற்றில் 50 சதவீதத்துக்கும் குறைவான சிறாா்களுக்கே இரு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com