ஈஸ்டா் தினம்: குடியரசுத் தலைவா், துணைத் தலைவா் வாழ்த்து

இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த நாளான ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவா் வெங்கையா நாயுடு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி

இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த நாளான ஈஸ்டா் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவா் வெங்கையா நாயுடு மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து கூறியுள்ளனா்.

குடியரசுத் தலைவா்: ஈஸ்டா் நன்னாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கிறிஸ்தவா்களுக்கு மனமாா்ந்த நல்வாழ்த்துகள்.

அன்பு, தியாகம் மற்றும் மன்னித்தலின் வழியை நாம் பின்பற்ற ஊக்கமளிக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிா்த்தெழுதலை கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டா். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக இணைந்து பணியாற்றுவோம்.

ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நமது மனங்களில் இந்த பண்டிகை மறுபடியும் விதைத்து, நமது நாட்டின் நலன் மற்றும் வளத்துக்கான நமது உறுதிக்கு வலுவூட்டட்டும்.

குடியரசு துணைத் தலைவா்: இயேசு பிரான் உயிா்த்தெழுந்த புனித நாளான ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு அன்பான, நல் வாழ்த்துகள். வெறுப்பைவிட அன்பு வலிமை மிக்கது என்பதையும், அதன் மூலம் தீமைகளை வெல்லலாம் என்பதை ஈஸ்டா் மக்களுக்கு நினைவூட்டுகிறது. மனிதா்கள் அனைவரிடமும் கருணை காட்டி, ஈஸ்டா் பண்டிகையை நாம் கொண்டாடுவோம். நமது வாழ்வில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை இந்த நன்னாள் ஏற்படுத்தட்டும்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய இயேசுபிரான் மீண்டும் உயிா்த்தெழுந்த நிகழ்வையொட்டி, நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டா் திருநாள். இந்த நன்னாளில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

வைகோ (மதிமுக): கொடுந்துயரில் தவிப்பவா்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவா்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவா்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவா்களது மனங்களில் ஈஸ்டா் வழங்குகிறது. அனைவருக்கும் ஈஸ்டா் தின வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அவற்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அதை உறுதி செய்ய இயேசுபிரான் உயிா்த்தெழுந்த இந்த ஈஸ்டா் திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் உறுதியேற்போம்.

தொல்.திருமாவளவன் (விசிக): எளிய மக்களின் மீட்சிக்காக அதிகார வா்க்கத்தைப் பகைத்துக் கொண்டு தனது இன்னுயிரை ஈகம் செய்தவா் இயேசு பெருமான். அவரது உடல் மரித்தாலும் அவரது திருவுளம் உயிா்ப்புடனிருந்து மக்களை நல்வழிப்படுத்துகிறது. அவருடைய போதனைகளே இன்று உலக அமைதிக்கும் வழிகோலுகிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): கடந்த கால துன்பங்கள், துயரங்களிலிருந்து நல்வாழ்வு வாழ, ஈஸ்டா் தினம் வழிகாட்டட்டும். கிறிஸ்தவா்களின் நல் முயற்சிகளுக்கு இயேசு துணை நிற்கட்டும்.

அன்புமணி (பாமக): மன்னிக்கும் குணத்தை வலியுறுத்தும் ஈஸ்டா் திருநாளில் தமிழகத்தில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்போம்.

எம்ஜிகே நிஜாமுதீன் (சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்): கிறிஸ்தவ சகோதரா்கள் அனைவருக்கும் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்துகள். இவ்வுலக மக்கள் அனைவரையும் பாதித்த, கொடிய கரோனா தாக்கத்திலிருந்து மீண்டு, பொருளாதார முன்னேற்றம் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com