
தனியார் நிறுவனத்தின் ரூ.757 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.757 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்படிருக்கும் இந்த நிறுவனம், தனது நிறுவனப் பெயரில் விற்பனை செய்யும் பொருள்களின் விலைகள், அதே வகையான சந்தையில் விற்பனையில் இருக்கும் பொருள்களின் விலைகளோடு ஒப்பிட்டால், மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. 'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
இந்த தனியார் நிறுவனம், பல கட்ட சந்தைப்படுத்துதலில் பல கோடி முறைகேடு செய்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் ஆலை, தொழிற்சாலைகள், வாகனங்கள், வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புகள், தொழிற்சாலை வளாகம் உள்ளிட்டவையும் அடங்கும்.
ED has provisionally attached assets worth Rs. 757.77 Crore belonging to M/s. Amway India Enterprises Private Limited, a company accused of running a multi-level marketing scam.
— ED (@dir_ed) April 18, 2022
முன்னதாக, இதே நிறுவனத்தின் ரூ.411.83 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் ரூ.345.94 கோடி வங்கிக் கணக்கையும் முடக்கியிருக்கிறது.
ஒருவர் இந்த நிறுவனத்தில் இணைந்து பொருள்களை வாங்கி பயன்படுத்துவதோடு, தங்களுக்குத் தெரிந்தவர்களையும் இதில் சேர்த்துவிடுவதால் கூடுதலாக சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தி, ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.