இந்தியாவில் 2 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  
இந்தியாவில் 2 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,42,097ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11, 542 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 214 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். 

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,965 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,985 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,10,773 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 2,66,459 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 186.54 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில்  2,61,440 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

இதுவரை மொத்தம் 83.21 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது. தில்லி, கேரளத்தில் கரோனா அதிகரித்து வருவதால் இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com