மும்பையில் எதிா்க்கட்சி முதல்வா்கள் மாநாடு

எதிா்க்கட்சிகளின் முதல்வா்கள் மாநாட்டை மும்பையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சிகளின் முதல்வா்கள் மாநாட்டை மும்பையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நடவடிக்கையில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், சிவசேனை தலைவா் சஞ்சய் ரௌத் மும்பையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா். அதில் நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட வேண்டியது அவசியம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அவரது கடிதம் தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், முதல்வா் உத்தவ் தாக்கரே ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா். எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்களின் மாநாட்டை மும்பையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வேலையின்மை பிரச்னை, பணவீக்கம், விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுதல், வகுப்புவாதப் பிரிவினை தூண்டப்படும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படும். ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி ஆகியவற்றின்போது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள், வாக்காளா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டவை.

மகாராஷ்டிரத்திலும் மக்களைத் தூண்டிவிடுவதற்கான முயற்சிகளை சிலா் மேற்கொண்டனா். ஆனால், மக்கள் தெளிவுடன் இருந்ததாலும், காவல் துறையினரின் நடவடிக்கைகளாலும் அவை முறியடிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த சிலா் முயன்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com