
கோப்புப்படம்
உத்தரப் பிரதேச தலைநகரம் லக்னௌ மற்றும் 6 தேசியத் தலைநகர் வலயம் (என்சிஆர்) மாவட்டங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தேசியத் தலைநகர் வலயத்தின் கீழ் வரும் மாவட்டங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கின்றன.
இதையும் படிக்க | அனுமன் ஜெயந்தி கலவரம்: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது
இதைக் கருத்தில் கொண்டு கௌதம் புத் நகர், காசியாபாத், ஹபூர், மீரத், புலன்த்ஷர், பாக்பட், தலைநகர் லக்னௌ ஆகிய மாவட்டங்களில் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது" என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் கௌதம் புத் நகரில் 65 பேருக்கும், காசியாபாத்தில் புதிதாக 20 பேருக்கும், லக்னௌவில் 10 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் முகக் கவசம் அணிவதில் உத்தரப் பிரதேச அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.