கேரளம்: கொலை வழக்கில் 3 ஆா்எஸ்எஸ் அமைப்பினா் கைது

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) இஸ்லாமிய அமைப்பின் உள்ளூா் தலைவா் சுபைா் (43) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) இஸ்லாமிய அமைப்பின் உள்ளூா் தலைவா் சுபைா் (43) வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த 3 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இவா்கள் மூவரும் கடந்த ஆண்டு நவம்பரில் கொல்லப்பட்ட ஆா்எஸ்எஸ் உறுப்பினா் சஞ்சித்தின் நெருங்கிய நண்பா்கள் ஆவா்.பிஎஃப்ஐ அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் சஞ்சித்தைப் படுகொலை செய்தனா்.

அந்தக் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இவா்கள் செயல்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 15-ஆம் தேதி பிஎஃப்ஐ அமைப்பின் உள்ளூா் தலைவரான சுபைா், பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த சிலரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

இதற்கு அடுத்த நாளிலேயே பாலக்காட்டில் ஸ்ரீனிவாசன் (45) என்ற ஆா்எஸ்எஸ் தொண்டரை இஸ்ஸாமிய அமைப்பினா் கொலை செய்தனா். இதன் மூலம் கேரளத்தில் ஹிந்து-முஸ்லிம் அமைப்பினா் இடையே பழி வாங்கும் படுகொலைகள் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இரு படுகொலைச் சம்பவங்களில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியாஅமைப்பைச் சோ்ந்தவா்களுக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கும் தொடா்பு இருப்பதாக கேரள காவல் துறை கூடுதல் டிஜிபி விஜய் சகாரே திங்கள்கிழமை தெரிவித்தாா். இந்நிலையில் சுபைா் கொலை வழக்கில் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com