சோனியா காந்தியுடன் சத்தீஸ்கர், ராஜஸ்தான் முதல்வர்கள் சந்திப்பு

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகெல் ஆகியோர் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகெல் ஆகியோர் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினர். 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகிய இருவரும் தங்கள் மாநில அரசியல் சூழ்நிலை குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சோனியா காந்தியிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. 

தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் 2024 பொதுத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேர்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோர் நேற்று தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கடந்த 4 நாள்களில் 3 முறை சோனியா - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com