‘நாட்டின் அடையாளமாக பிரசாந்த் கிஷோர் மாறிவிட்டார்’: ராஜஸ்தான் முதல்வர்

நாட்டின் அடையாளமாக பிரசாந்த் கிஷோர் மாறிவிட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்

நாட்டின் அடையாளமாக பிரசாந்த் கிஷோர் மாறிவிட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூக நிபுணரும் ஐ-பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கான அறிக்கையை கடந்த வாரத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தார்.

தொடர்ந்து, கடந்த 4 நாள்களில் 3 முறை பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் கூறியதாவது:

நாட்டின் அடையாளமாக பிரசாந்த் கிஷோர் மாறிவிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடியுடன், பின் நிதிஷ் குமார், பஞ்சாப் காங்கிரஸ் மற்றும் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

நாங்களும் தேர்தல் நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் ஆலோசனைகளை பெறுகிறோம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க அவரின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், சமூக ஊடகங்களில் மக்களைத் தூண்டிவிட்டு, வன்முறைகள் நடக்கும் விதத்தை வைத்து நாடு எங்கே போகிறது என்பதை நாம் அறிவோம். இது ஆபத்தான அரசியல். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வன்முறையை வன்முறையால் கையாளக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com