அடல் ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியது

மார்ச் 2022-ல் முடிவடைந்த நிதியாண்டில் 99 லட்சத்திற்கும் அதிகமான அடல் பென்ஷன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: மார்ச் 2022-ல் முடிவடைந்த நிதியாண்டில் 99 லட்சத்திற்கும் அதிகமான அடல் பென்ஷன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மொத்த பதிவுகளின் எண்ணிக்கை 4.01 கோடியாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

71 சதவீதம் பொதுத்துறை வங்கிகளாலும், 19 சதவீதம் பிராந்திய கிராமப்புற வங்கிகளாலும், 6 சதவீதம் தனியார் துறை வங்கிகளாலும், 3 சதவீதம் பணம் மற்றும் சிறு நிதி வங்கிகளாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2022 நிலவரப்படி, அடல் பென்ஷன் யோஜனாவின் (ஏபிஒய்) மொத்த பதிவுகளில், கிட்டத்தட்ட 80 சதவீத சந்தாதாரர்கள் ரூ.1000 ஓய்வூதியத் திட்டத்தையும், 13 சதவீதம் பேர் ரூ.5000 ஓய்வூதியத் திட்டத்தையும் தேர்வு செய்துள்ளனர்.

மொத்த ஏபிஒய் சந்தாதாரர்களில், 44 சதவீதம் பேர் பெண் சந்தாதாரர்கள் மற்றும் 56 சதவீதம் பேர் ஆண் சந்தாதாரர்கள். மேலும், மொத்த ஏபிஒய் சந்தாதாரர்களில், 45 சதவீதம் பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று நிதி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடல் பென்ஷன் யோஜனா என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசாங்கத்தின் உத்தரவாத ஓய்வூதியத் திட்டமாகும். 18-40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் எவரும் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் சேர  இந்தத் திட்டம் அனுமதிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com