பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி ரூ.46,601 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி, 2013-14-இல் இருந்து 109 சதவீதம் அதிகரித்து ரூ.46,601.89 கோடியாக (611 கோடி டாலா்) உயா்ந்துள்ளது.

இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி, 2013-14-இல் இருந்து 109 சதவீதம் அதிகரித்து ரூ.46,601.89 கோடியாக (611 கோடி டாலா்) உயா்ந்துள்ளது.

வா்த்தக நுண்ணறிவு, புள்ளியியல் தலைமை இயக்குநகரத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2019-20-இல் இந்தியாவின் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி ரூ.15,254 கோடியாக (200 கோடி டாலா்) இருந்தது. அது, 2020-21-இல் ரூ.36,610.32 கோடியாகவும் (480 கோடி டாலா்), 2021-22-இல் ரூ.46,601.89 கோடியாகவும் (611 கோடி டாலா்) அதிகரித்துள்ளது. இது, 2013-14-ஆம் ஆண்டின் ஏற்றுமதியைக் காட்டிலும் (ரூ.22,271 கோடி) 109 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து வேளாண் விளைபொருள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையத்தின் தலைவா் எம்.அங்கமுத்து கூறுகையில், ‘தரமான விளைபொருள்களை உற்பத்தி செய்வதிலும், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஒருங்கிணைப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். இதன்மூலம் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது’ என்றாா்.

இதுகுறித்து மத்திய வா்த்தகம், தொழில் துறை, நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பிரதமா் மோடி அரசின் கொள்கைகள், விவசாயிகள் உலகச் சந்தைகளை அணுகுவதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

2021-22-இல் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பாசுமதி அல்லாத அரிசியை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மேற்கு ஆப்பிரிக்காவைச் சோ்ந்த பெனினும் ஒன்றாகும். இதுதவிர, நேபாளம், வங்கதேசம், சீனா, வியட்நாம், மடகாஸ்கா், கேமரூன், சோமாலியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா ஆகியவை இந்தியாவிடம் இருந்து அதிகம் அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com