பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக அமரீந்தர் சிங் ராஜா பொறுப்பேற்பு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக அமரீந்தர் சிங் ராஜா பொறுப்பேற்பு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் பொறுப்பேற்றார். 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் பொறுப்பேற்றார். 

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப தான் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்து விலகுவதாக சித்து அறிவித்தார். 

தேர்தலில் அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சித்துவும் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். சித்து, கடந்த ஜூலை மாதம்தான் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றாா். இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் இன்று பொறுப்பேற்றார். மேலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் செயல்தலைவராக பாரத் பூஷனும் பதவியேற்றார். 

இதற்கான நிகழ்ச்சி பஞ்சாப் காங்கிரஸ் பவனில் எளிய முறையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இருப்பினும் இந்நிகழ்ச்சியில் சித்து பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 117 தொகுதிகளுக்கு நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவை தோ்தலை ஆளும் கட்சியாக இருந்து காங்கிரஸ், 18 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 

அதே நேரத்தில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com