காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை: திக்விஜய் சிங்

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு அக்கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை: திக்விஜய் சிங்

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு அக்கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் கடந்த சில நாள்களாக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் தன்னுடைய திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

முக்கியமாக, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம், கட்சியை எப்படி மறு சீரமைக்கலாம் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்துவருகிறார். 

கிஷோரின் திட்டம் குறித்து மதிப்பீடு செய்யும் குழுவை தவிர்த்து காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் முதல்வர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த வாரத்தில் நான்காவது முறையாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, கே. சி. வேணுகோபால், சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ‘ பிரசாந்த் கிஷோருடன் எனக்கு மிக நெருக்கமான தொடர்பு உண்டு. . அவர் ஒரு அரசியல் ஆய்வாளர். அதனால் எந்த வகையான அரசியல் அர்ப்பணிப்பும் வெளிப்படையானது அல்ல. ஆனால் இப்போது அவர் உறுதியான ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவர் காங்கிரஸில் இணைவதற்கு கட்சிக்குள் இருந்த எந்த எதிர்ப்பும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com