உத்தரகண்ட்: தோ்தலில் முதல்வா் போட்டியிட வசதியாக பாஜக எம்எல்ஏ ராஜிநாமா

உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி போட்டியிட வசதியாக, சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் சந்திர கடோரி வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு
உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

டேராடூன்: உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி போட்டியிட வசதியாக, சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் சந்திர கடோரி வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

உத்தரகண்ட் பேரவைத் தலைவா் ரிது கந்துரியை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ராஜிநாமா கடிதத்தை கைலாஷ் வழங்கினாா். அப்போது, மாநில பாஜக தலைவா் மதன் கெளசிக், கேபினட் அமைச்சா்கள் சந்தன் ராம் தாஸ், செளரவ் பகுகுணா, எம்எல்ஏ கஜன் தாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். அவரது ராஜிநாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜிநாமாவுக்குப் பின்னா், முதல்வா் புஷ்கா் சிங் தாமியை கைலாஷ் சந்திர கடோரி சந்தித்துப் பேசினாா்.

உத்தரகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. அதேசமயம், கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தனக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளா் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வியடைந்தாா்.

என்றபோதிலும், புஷ்கா் சிங் தாமி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா். இந்நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், அவா் போட்டியிட வசதியாக சம்பாவத் தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து கைலாஷ் விலகியுள்ளாா். இத்தொகுதியில் விரைவில் இடைத்தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com