எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் இப்தார் விருந்தில் நிதிஷ்குமார் பங்கேற்பு

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் இல்லத்தில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று பிகார் அரசியலில் பரபரப்பை
பாட்னாவில் புனித ரமலான் மாதத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் ஆர்ஜேடி தலைவர் ரப்ரி தேவியுடன் பிகார் முதல்வர் நிதிஷ்குமார்.
பாட்னாவில் புனித ரமலான் மாதத்தில் நடைபெற்ற இப்தார் விருந்தில் ஆர்ஜேடி தலைவர் ரப்ரி தேவியுடன் பிகார் முதல்வர் நிதிஷ்குமார்.

பாட்னா: முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் இல்லத்தில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்குமார் வெள்ளிக்கிழமை பங்கேற்று பிகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இப்தார் விருதில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலங்களவை உறுப்பினர் மிசா பார்தி ஆகியோர் நிதிஷின் அருகில் அமர்ந்து தேஜஸ்வியுடன் பேசிக் கொண்டும், மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

வீர் குன்வர் சிங் 'விஜயோத்சவா'வில் கலந்து கொள்வதற்காக, போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வருகை தருவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆர்ஜேடி வழங்கிய இப்தார் விருந்தில் நிதிஷ்குமார் கலந்து கொண்டது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாஜக மற்றும் ஜேடியு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நேரத்தில் இது நடந்துள்ளது.

மதுவிலக்கு, சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு முதல் மாநில பாஜக தலைமை வரை ஏராளமான பிரச்னைகளில் பாஜக மற்றும் ஜேடியு ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், நிதிஷ் தனது  இல்லத்தில் இப்தார் விருந்து அளித்தார், இதில் ஏராளமான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், பாஜக, ஜேடியு, எல்ஜேபி என அனைத்து கட்சியினருக்கும் நாங்கள் இப்தார் விருந்து அழைப்பு விடுத்தோம். அனைவரும் இப்தார் விருந்தில் பங்கேற்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று கூறினார். 

இதனை அரசியல் ரீதியாகப் பார்க்க வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி அளித்த இப்தார் விருந்தில் அம்மாநில முதலவர் நிதிஷ்குமார் பங்கேற்றிருப்பது பாஜகவை கழற்றிவிட்டு, நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணிக்கு தயாராகிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com