கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்: தயாரிப்புப்பை நிறுத்தியது சீரம்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுனமான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்
கோவிஷீல்டு மருந்துகள் காலாவதியாகும் அபாயம்


உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுனமான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. தடுப்பூசியின் தேவை குறைந்து வருவதை அடுத்து கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவல்லா தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நூறு கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி டோஸ்களை தயாரித்துள்ள சீரம் நிறுவனம், போதிய தேவை இல்லாததால்
கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டைம்ஸ் நெட்வொர்க் மீடியா குழு ஏற்பாடு செய்திருந்த பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீரம் நிறுவனம் தலைவர் ஆதார் பூனாவல்லா கூறியதாவது: 

"எங்களிடம் தற்போது 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் விற்பனையாகாமல் கையிருப்பில் உள்ளது. “அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை.  அவை காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம். கையிருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்களை யார் வாங்கிக்கொள்ள முன் வருகிறார்களோ அவர்களுக்கு இலவச சலுகைகளை வழங்கவும் முன்வந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்த தேதியில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் நூறு கோடி கணக்கான மக்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 

உலகில்  கரோனா பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடான இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் சுமார் 1,000 ஆக குறைந்திருந்த தினசரி தொற்று பாதிப்பு, கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தில்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மக்கள் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com