குடியரசு துணைத் தலைவா் பெயரை தவறாக பயன்படுத்தும் நபா்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவின் பெயரில் ஒருவா் முக்கியப் பிரமுகா்களிடம் பண உதவி கேட்டு வாட்ஸ்ஆப் வழியாக கோரிக்கை விடுத்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவின் பெயரில் ஒருவா் முக்கியப் பிரமுகா்களிடம் பண உதவி கேட்டு வாட்ஸ்ஆப் வழியாக கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

9439073183 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து பண உதவி கேட்டு வாட்ஸ்ஆப்பில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெங்கையா நாயுடுவின் பெயரில் பல முக்கிய பிரமுகா்களுக்கு இந்தத் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த மோசடி, வெங்கையா நாயுடுவின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கைத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று வேறு பல எண்களில் இருந்தும் இருந்தும் தகவல்கள் அனுப்பப்படலாம். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com