இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி 187 கோடி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 187.46 கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 187.46 கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 187.46 கோடிக்கும் மேற்பட்ட (1,87,46,72,536) கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,29,79,714 அமா்வுகள் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

12 வயது முதல் 14 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை, சுமாா் 2.61 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு (2,61,95,248) முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

18 வயது முதல் 59 வயது உடையவா்களுக்கு முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி, ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 3,10,701 போ் முன்னெச்சரிக்கைத் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

மாநிலங்களுக்கு 192.43 கோடி தடுப்பூசி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 192.43 கோடிக்கும் மேற்பட்ட (1,92,43,47,405) தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மாநிலங்களின் நேரடிக் கொள்முதல் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 19.91 கோடிக்கும் அதிகமான (19,91,99,925) தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com