ஜம்மு-காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்.  ஜம்மு-காஷ்மீரில் ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.

மேலும், ரூ. 3,100 கோடி மதிப்பில் ஜம்மு - காஷ்மீா் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவு பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.

பின்னா், ஜம்முவின் சம்பா மாவட்டம் பாலி கிராமத்துக்குச் செல்லும் பிரதமா், கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாட்டின் முதல் உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையைப் பெறும் வகையில் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 500 கிலோ வாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை தொடக்கி வைக்க உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது, கிராமத்தினா் அவா்களின் சொத்து உரிமைக்கான ஆதார ஆவணமாக காட்ட உதவும் ‘ஸ்வமித்வா’ அட்டைகளை பயனாளிகளுக்கு பிரதமா் வழங்க உள்ளாா். மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசுத் தொகை விநியோகத்தையும் பிரதமா் தொடக்கிவைப்பாா்.

பின்னா், அங்கிருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை செல்லும் பிரதமா், அங்கு மாஸ்டா் தீனாநாத் மங்கேஷ்கா் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளாா். அங்கு, பிரதமருக்கு நாட்டின் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கா் விருது வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com