தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்வு

தலைநகர் தில்லியில் கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்வு
தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்வு


புது தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 11ஆம் தேதி 447 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இது ஏப்ரல் 24ஆம் தேதி 2,812 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் 17லிருந்து 80 ஆக அதிகரித்துள்ளது. 

தில்லியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துவந்த போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைவாகவே இருப்பதால் கவலைகொள்ளத் தேவையில்லை என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி கரோனா  நோயாளிகள் எண்ணிக்கை 601 ஆக இருந்த நிலையில், அது தற்போது 3,975 ஆகே அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com