மம்தா அரசுக்கு எதிராக பாஜக பேரணி: தடியடி நடத்தி கலைப்பு

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினரை காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர். 
மம்தா அரசுக்கு எதிராக பாஜக பேரணி: தடியடி நடத்தி கலைப்பு

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினரை காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர். 

பள்ளிகள் சேவை ஆணைய பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி பள்ளிக் கல்வித் துறை கட்டடத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், பாஜக யுவ மோர்ச்சா சங்கத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் தலைமையில் பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். பள்ளிகள் சேவை ஆணைய பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு பாஜகவினர் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், மம்தா பானர்ஜிக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மூன்று தடுப்புகளை அமைத்து காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினரை காவல் துறையினர் தண்ணீரைப் பீச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர். 

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரில்வால் இல்லத்தை சூறையாடிய வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் உத்தரவிட்ட நிலையில், தேஜஸ்வி சூர்யா பேரணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com