தில்லி குப்பைக் கிடங்கில் தீ: தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடல்

வடக்கு தில்லியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
தில்லி குப்பைக் கிடங்கில் தீ: தனியார் பள்ளி ஒரு வாரத்திற்கு மூடல்

வடக்கு தில்லியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தில்லியின் வடக்குப் பகுதியில் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் நேற்று மாலை 5.47 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பல மணி நேரங்களாக வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. 

இதையடுத்து விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள ஞான சரோவர் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். 

'தீ விபத்தினால் தொடர்ந்து புகை மூட்டம் வருவதால் குழந்தைகள் பள்ளிக்கு  பாதுகாப்பானது அல்ல. ஒரு வாரத்திற்கு பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம்' என்று பள்ளி ஒருங்கிணைப்பாளர் நாராயணா தெரிவித்துள்ளார்.

முன்னதாக , இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார். 

இந்த விபத்து தவிர நேற்று தில்லியில் 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com