எல்ஐசி பங்கின் விலை ரூ.902 - 949 ஆக நிர்ணயம்

எல்ஐசியின் பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக பங்குச் சந்தையில் வெளியிடவிருக்கும் நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.902- 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எல்ஐசியின் பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக பங்குச் சந்தையில் வெளியிடவிருக்கும் நிலையில், ஒரு பங்கின் விலை ரூ.902- 949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு மே 4-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தகவலை முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே இன்று வெளியிட்டார்.

எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ (பொது பங்கு) வாயிலாக மத்திய அரசு விற்பனை செய்து ரூ.21,000 கோடி திரட்ட திட்டமிட்டிருந்தது. முன்னதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு 5 சதவீத பங்கு அல்லது ரூ.31.6 கோடி பங்கை விற்பனை செய்ய முடிவெடுத்து, அதற்கான வரைவு அறிக்கைகளை செபியிடம் தாக்கல் செய்திருந்தது. ஆனால், உக்ரைன்- ரஷியா போரால் சந்தையில் காணப்பட்ட நிலையற்ற தன்மை காரணமாக பொதுப் பங்கு விநியோக திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டது. 

ஆகையால், பங்கு வெளியீட்டு அளவை 5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக கடந்த வாரம் மத்திய அரசு குறைத்தது. ரூ.21 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டாலும், இந்தியாவில் பொது பங்கு வாயிலாக வெளியிடப்படும் மிகப்பெரிய பங்குகளாக எல்ஐசி ஐபிஓ அமையும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com