கோவாவில் தோற்றதற்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம்: ராஜிநாமா செய்த திரிணமூல் தலைவர்

​கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த கிரண் கண்டோல்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த கிரண் கண்டோல்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம். காங்கிரஸை மிரட்டுவதற்காக அவர் கோவாவில் இருந்தார். ஆனால், பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதற்கு அது உதவியது."

காங்கிரஸ் மிரட்டுவது குறித்து அவர் விரிவாக விளக்கமளிக்கவில்லை. கண்டோல்கருடன் இணைந்து தரக் அரோல்கர் மற்றும் சந்தீப் வசர்கர் ஆகியோரும் ராஜிநாமா செய்திருப்பது திரிணமூல் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, கோவா மாநில கமிட்டியை திரிணமூல் காங்கிரஸ் முழுவதுமாக மறுகட்டமைப்பு செய்வதாக கட்சியின் கோவா பிரிவு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com