பாரத்பூருக்கு சாலை இணைப்புக் கோரி ராஜஸ்தான் முதல்வர் கட்கரிக்கு கடிதம் 

பாரத்பூர் நகரத்திற்கு சிறந்த சாலை இணைப்பை அமைக்கக் கோரி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய போக்குவரத்து அமைச்சர் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
பாரத்பூருக்கு சாலை இணைப்புக் கோரி ராஜஸ்தான் முதல்வர் கட்கரிக்கு கடிதம் 

பாரத்பூர் நகரத்திற்கு சிறந்த சாலை இணைப்பை அமைக்கக் கோரி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய போக்குவரத்து அமைச்சர் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஆல்வார்-பாரத்பூர் (97 கிமீ) சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துவதுடன், பனியாலா மோட் மற்றும் தில்லி-மும்பை விரைவுச்சாலையை மாநிலத்தின் பரத்பூர் வரை நீட்டிக்குமாறு கெலாட் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டார். 

அந்த கடிதத்தில், பாரத்பூரில் உலகப் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு நகரத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை வருகின்றனர். 

தில்லி-மும்பை கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை மற்றும் ராஜஸ்தானில் புதிதாக கட்டப்பட்ட அம்பாலா-நர்னால்-பனியாலா மோட் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பனியாலா மோட்-அல்வார்-படோடாமியோ வழியாக இணைக்கப்படுகின்றன என்று அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் அம்பாலா-நர்னால்-பனியாலா விரைவுச்சாலையில் இருந்து வரும் போக்குவரத்து எதிர்காலத்தில் பாரத்பூர், ஆக்ரா மற்றும் மதுராவை அடைய எளிதான மற்றும் அணுகக்கூடிய பாதை தேவைப்படும் என்று முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும், பணியாலா மோட் முதல் தில்லி-மும்பை விரைவுச்சாலை வரையிலான சாலையை பாரத்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், ஆல்வார்-பாரத்பூர் சாலையையும் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும் என்றும், அதை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியம் என்றும் கூறினார்.

முதல்வர் கெலட்டின் கூற்றுப்படி, இது இந்த பகுதியில் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com