கராச்சி பல்கலை.யில் மனித வெடிகுண்டாக வந்த பெண் யார்?

பலூச் விடுதலை ராணுவத்தின் முதல் பெண் மனித வெடிகுண்டாக மாறியுள்ளார் சஹரி பலூச் என்ற ஆசிரியை.
கராச்சி பல்கலை.யில் மனித வெடிகுண்டாக வந்த பெண் யார்?

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் பா்தா அணிந்துவந்த பெண் செவ்வாய்க்கிழமை நடத்திய தற்கொலை தாக்குதலில், சீனாவைச் சோ்ந்த மூவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

இது பாகிஸ்தானில் வசிக்கும் சீன மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படுகிறது. சீனாவால் கட்டப்பட்ட கன்ஃபூசியஸ் கல்வி மையம் அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு, பலூச் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், பல்கலைக் கழக வாயிலில் உடையில் வெடிகுண்டு அணிந்து வந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஆப்கானிஸ்தான் செய்தியாளர் பஷீர் அஹமது குவாக் தெரிவித்துள்ளார். 

கராச்சி பல்கலைக் கழக வாயிலில் மனித வெடிகுண்டாக வந்த பெண் சஹரி பலூச். பலூச் விடுதலை ராணுவத்தில் முதல் பெண் மனித வெடிகுண்டாக மாறியுள்ளார். 30 வயதான அவர் விலங்கியல் பாடத்தில் முதுகலைப் (எம்.பில்) பயின்றுள்ளார். பள்ளியில் ஆசிரியையாகவும் பணி செய்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவத்தால் அவரது குடும்பத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை. எனினும் அவர் இத்தகைய பாதையை தேர்வு செய்துள்ளார். இது அழிவுப் பாதையின் எச்சரிக்கை மணியாகவே உள்ளது என்று பஷீர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் செய்த இந்த செயலுக்கு எத்தகைய காரணங்கள் இருந்தாலும், அது பலூச் விடுதலை ராணுவத்தின் முட்டாள்தனமான புதிய தொடக்கமாகவே உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com