
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 17 மாவட்டத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை உயர்ந்துள்ளது. பன்ஸ்வாராவில் புதன்கிழமை அதிகபட்சமாக 45.5 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில், வனஸ்தாலி 45.4 டிகிரி, தோல்பூர் - 45.4, பார்மர் - 45.1, ஜோத்பூரின் பலோடி - 45.2, பிகானரில் - 45.2 மற்றும் கரௌலியில் 45 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிலானி 44.4 டிகிரி, சுரு - 44, ஸ்ரீகங்காநகர் - 44.7, நாகவுர் - 44.5, பூண்டி - 44.5, பாரன்ஸ் அன்டா - 44.2, துங்கர்பூர் - 44.4 மற்றும் ஜாலோரே. 44.4 டிகிரி ஆகிய 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரிக்கு மேல் இருந்தது,
10 மாவட்டங்களில் 43 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதில் சித்தோர்கர் 43.2 டிகிரி, ஹனுமன்கர் - 43.6, சிரோஹி - 43.3, சவாய் மாதோபூர் மற்றும் அல்வாரில் தலா 43.5 டிகிரி,
கோட்டாவில் 43.6 டிகிரி, ஜெய்சல்மேர் - 43, ஜோத்பூர் - 43.6, அஜ்மீர் மற்றும் பில்வாராவில் - தலா 43 டிகிரி. சித்தோர்கர் 42.5, அல்வாரில் - 42.2, ஜெய்ப்பூர் - 42.4, சிகார் - 42 மற்றும் உதய்பூரின் தபோக்கில் 41.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மாநிலத்தில் இரவில் அதிகபட்ச வெப்பநிலையாக ஜோத்பூரில் 30.9 டிகிரியாகவும், பார்மரில் 30.8 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தானில் பன்ஸ்வாரா, நாகௌர், பூண்டி, பரான், துங்கர்பூர், ஜலோர், பரத்பூர், தோல்பூர், கரௌலி, சவாய் மாதோபூர், டோங்க், சுரு, பார்மர், பிகானேர், ஜெய்சால்மர், ஜோத்பூர், ஸ்ரீ கங்காநகர் ஆகிய 17 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது.
பரத்பூர், ஜெய்ப்பூர், பிகானீர் மற்றும் ஜோத்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், 25 முதல் 35 கி.மீ., வேகத்தில் புழுதிக்காற்று வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வயோதிகர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வெயிலின் போது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப அலையிலிருந்து விலங்குகள் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.