நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்குத் தொற்று: 60 பேர் பலி

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 3,303 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 3,377 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்குத் தொற்று: 60 பேர் பலி


புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 3,303 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 3,377 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,496 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 3,377 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,72,176 ஆக உள்ளது. 47 நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 3,000-ஐத் தாண்டியது.

கடந்த 24 மணிநேரத்தில் 60 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,753 ஆக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 2,496 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,30,622 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 17,801 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.71 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.63 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 188.65 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 83.69 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,73,635 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com