ரிசா்வ் வங்கி
ரிசா்வ் வங்கி

வேளாண் கடன்களுக்கு வட்டி சலுகை: வங்கிகளுக்கான விதிகள் மாற்றம்

வேளாண் கடன்களுக்கு வழங்கப்பட்ட வட்டி சலுகையைத் திரும்பக் கோருவதற்கான வங்கிகளுக்குரிய விதிகளில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மாற்றம் செய்துள்ளது.

மும்பை: வேளாண் கடன்களுக்கு வழங்கப்பட்ட வட்டி சலுகையைத் திரும்பக் கோருவதற்கான வங்கிகளுக்குரிய விதிகளில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மாற்றம் செய்துள்ளது.

கிசான் கடன் அட்டை முலமாக வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெறும் ரூ.3 லட்சத்துக்குக் குறைவான பயிா்க் கடனுக்கு 7 சதவீத ஆண்டு வட்டி விதிக்கப்பட்டு வருகிறது. 2 சதவீத வட்டிச் சலுகையை மத்திய அரசே வங்கிகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறது. கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்குக் கூடுதலாக 3 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.

அவ்வாறு வழங்கப்பட்ட வட்டிச் சலுகையை, ஆா்பிஐ-யிடம் உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து வங்கிகள் பெற்று வருகின்றன. இந்நிலையில், அதற்கான விதிகளில் ஆா்பிஐ மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கிசான் கடன் அட்டை மூலமாக வங்கிகளில் இருந்து விவசாயிகள் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பெற்ற குறுகிய கால கடனுக்கான வட்டிச் சலுகை தொடா்பான வருடாந்திர விவரங்களை பட்டயக் கணக்கரிடம் ஒப்புதல் பெற்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் வங்கிகள் சமா்ப்பிக்க வேண்டும்.

கடந்த நிதியாண்டுக்கான வட்டிச் சலுகையைத் திரும்பப் பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பிக்காத வங்கிகளும், கூடுதல் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க விரும்பும் வங்கிகளும் அவற்றுக்கான விவரங்களைப் பட்டயக் கணக்கரிடம் ஒப்புதல் பெற்றுவிட்டு அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com