58 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பிஜேடி எம்எல்ஏ!

ஒடிசா மாநிலம் புல்பானி தொகுதி பிஜேடி எம்.எல்.ஏ., அங்கதா கன்ஹர், 58 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பிஜேடி எம்.எல்.ஏ அங்கதா கன்ஹர்
பிஜேடி எம்.எல்.ஏ அங்கதா கன்ஹர்


ஒடிசா மாநிலம் புல்பானி தொகுதி பிஜேடி எம்.எல்.ஏ., அங்கதா கன்ஹர், 58 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

புல்பானியைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ., அங்கதா கன்ஹார், ஒடிசாவில் தனது இரு நண்பர்களுடன் ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) நடத்தும் மெட்ரிக் தேர்வில் முதல் தாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) எழுதினார். 58 வயதில் பத்தாம் ஆம் வகுப்புத் தேர்வெழுதி, 'கற்க வயது தடையில்லை' என்ற பழமொழியை நிரூபித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் புல்பானியைச் சேர்ந்த அங்கதா கன்ஹார் குடும்பக் காரணங்களால் 1978-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார். 

இதுகுறித்து தேர்வு அறைக்குள் நுழையும் முன் கன்ஹர் கூறியதாவது: 

"நான் 1978-இல் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், ஆனால் சில குடும்பப் பிரச்னைகளால் தேர்வு எழுத முடியவில்லை. சமீபத்தில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பலர் தேர்வு எழுதுவதாக தெரிய வந்தது. இதையடுத்து நானும் தேர்வு எழுத விண்ணப்பித்தேன். இதன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும்  தேர்வு எழுதவோ, கல்வி கற்கவோ வயது தடை இல்லை" என்று கூறினார். 

ஒடிசாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 5.8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com