பெங்களூருவில் அதிகரிக்கும் கரோனா: சுகாதாரத்துறை எச்சரிக்கை

பெங்களூருவில் கடந்த ஏழு நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வருவதையடுத்து, அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 
பெங்களூருவில் அதிகரிக்கும் கரோனா: சுகாதாரத்துறை எச்சரிக்கை

பெங்களூருவில் கடந்த ஏழு நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வருவதையடுத்து, அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

பெல்லந்தூர், ஹகடூர், வர்தூர், ஹெச்எஸ்ஆர் லேஅவுட், தொட்டனெக்குண்டி மற்றும் கோரமங்களா ஆகிய அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கரோனா தொற்று பதிவாகியுள்ளன. 

முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தப் பகுதிகளில் அமைந்துள்ளன.

நாட்டிலேயே தொற்றுநோய்களின் அடிப்படையில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. தொற்று விகிதம் 0.09 சதவீதமாகவும், இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் 127 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,667 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மால்கள், திரையரங்குகள், உணவகங்களில் கரோனா வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரண்டு முறை தடுப்பூசி போட்ட நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களின் தகவல் சேகரித்து, அவர்களை கண்காணிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com