ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல்: மிகப்பெரிய இலக்கை எட்டிய காதி

இந்தியாவில் உள்ள எந்தவொரு வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் நிறுவனமும் எட்ட முடியாத மிகப்பெரிய இலக்கை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எட்டியுள்ளது.
ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல்: மிகப்பெரிய இலக்கை எட்டிய காதி
ரூ. 1 லட்சம் கோடி விற்றுமுதல்: மிகப்பெரிய இலக்கை எட்டிய காதி

புது தில்லி: இந்தியாவில் உள்ள எந்தவொரு வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் நிறுவனமும் எட்ட முடியாத மிகப்பெரிய இலக்கை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஆதரவின் காரணமாக, 2021-22-ல் ரூ 1 லட்சம் கோடி விற்றுமுதலை காதி தாண்டி, ரூ 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய விற்றுமுதலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ 1 லட்சம் கோடி விற்றுமுதல் பெற்ற நாட்டின் ஒரே நிறுவனமாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மாறியுள்ளது.

2020-21-ல் ரூ 95, 741.74 கோடியாக இருந்த 2021-22 ஒட்டுமொத்த விற்றுமுதல், 2021-22-ல் ரூ.1,15,415.22 கோடியை எட்டி 20.54% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2014-15 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 ஆம் ஆண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 172% அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் மொத்த விற்பனை 248% அதிகரித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, முதல் 3 மாதங்களில், அதாவது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டில் பகுதியளவு ஊரடங்கு இருந்தபோதிலும், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த மிகப்பெரிய வருவாயை ஈட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com