பாகிஸ்தானில் 10 நாட்களுக்குள் 2 பேருக்கு போலியோ தொற்று பதிவு

பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களுக்குள் இரண்டு பேருக்கு போலியோ வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானில் கடந்த 10 நாட்களுக்குள் இரண்டு பேருக்கு போலியோ வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. 

நாட்டில் கிட்டத்தட்டட 15 மாதங்களாக போலியோ தொற்று இல்லாத நிலையில், தற்போது மெல்ல மீண்டும் தலைகாட்டியுள்ளது, தொடர்புடைய அதிகாரிகளுக்கிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. 

வடக்கு வஜிரிஸ்தானைச் சேர்ந்த 2 வயது சிறுமி WPV1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தின் தேசிய போலியோ ஆய்வகம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, 15 மாத ஆண் குழந்தை போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு குழந்தைகளும் வடக்கு வஜிரிஸ்தானின் மிர் அலி கவுன்சிலை சேர்ந்தவர்கள்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வாய்வழி மற்றும் ஊசி மூலம் போலியோ சொட்டு மருந்துகளை வழங்க குழு ஒன்று ஏற்கனவே அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாகாண போலியோ அவசர சிகிச்சை மையங்கள் கடந்த வாரம் போலியோ வழக்கு உறுதிசெய்யப்பட்ட பின்னர், அவசர தடுப்பூசி பிரசாரத்தை நடத்தி வருகின்றன. 

ஈத் விடுமுறைக்காக, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொருவரும், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறு சுகாதார செயலாளர் அமீர் அஷ்ரப் கவாஜா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com