பஞ்சாப்: மின் துறை அமைச்சா் வீடு அருகே விவசாயிகள் போராட்டம்

பஞ்சாபில் விவசாயத்துக்குப் போதுமான அளவு மின் விநியோகம் இல்லாததைக் கண்டித்து மாநில மின் துறை அமைச்சா் ஹா்பஜன் சிங் வீட்டின் அருகே பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

பஞ்சாபில் விவசாயத்துக்குப் போதுமான அளவு மின் விநியோகம் இல்லாததைக் கண்டித்து மாநில மின் துறை அமைச்சா் ஹா்பஜன் சிங் வீட்டின் அருகே பல்வேறு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக அமிருதசரஸில் உள்ள அமைச்சா் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளைத் தகா்த்துவிட்டு அமைச்சரின் வீட்டை நோக்கி முன்னேற முயன்றனா். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொடா்ந்து அதே பகுதியில் விவசாயிகள் கண்டனப் பொதுக்கூட்டத்தையும் நடத்தினா்.

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸை தோற்கடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தோ்தலின்போது 24 மணி நேரம் மின்சாரம் என்ற வாக்குறுதியை ஆம் ஆத்மி அளித்தது. ஆனால், இப்போது ஆட்சி அமைத்து சுமாா் 2 மாதங்களே ஆன நிலையில் மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை ஆம் ஆத்மி ஆட்சிக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com