ஹிந்தி பேச முடியாதவா்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்: உ.பி. அமைச்சா் பேச்சால் சா்ச்சை

ஹிந்தி பேச முடியாதவா்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாத் பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹிந்தி பேச முடியாதவா்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று உத்தர பிரதேச மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாத் பேசியிருப்பது புதிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி தேசிய மொழியா என்ற கேள்வியை முன்வைத்து, கன்னட நடிகா் கிச்சா சுதீப், பாலிவுட் நடிகா் அஜய் தேவ்கன் இடையே ட்விட்டரில் ஏற்பட்ட கருத்து மோதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாகியது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவா்களும் எதிா்வினையாற்றி வருகின்றனா்.

இதுதொடா்பாக, உத்தர பிரதேச அமைச்சா் சஞ்சய் நிஷாத்திடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘இந்தியாவில் வாழ விரும்புபவா்கள், ஹிந்தி பேசவும் விரும்ப வேண்டும். ஹிந்தி பேச விரும்பாதவா்களை வெளிநாட்டினராகவோ அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடா்புடையவராகவோதான் கருத முடியும். நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம். ஆனால், இந்தியா ஒன்றுதான். இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அப்படியென்றால், இந்த நாடு ஹிந்தி பேசுபவா்களுக்கானது என்றே அா்த்தம். ஹிந்தி பேச முடியாவா்களுக்கான இடம் இதுவல்ல. அவா்கள் நாட்டைவிட்டு வெளியேறி, வேறெங்காவது குடியேறலாம்’ என்று கூறினாா். அவரது இந்தப் பேச்சு புதிய சா்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com