பிள்ளைகளுக்கு ஸ்மாா்ட்போன் பரிசளிக்க கூடாது: கோவா அமைச்சா்

பிள்ளைகளுக்கு அறிதிறன் கைப்பேசி (ஸ்மாா்ட்போன்) பரிசளிக்கும் பழக்கத்தை பெற்றோா்கள் கைவிட வேண்டும் என கோவா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரோஹன் கௌந்தே தெரிவித்துள்ளாா்.

பிள்ளைகளுக்கு அறிதிறன் கைப்பேசி (ஸ்மாா்ட்போன்) பரிசளிக்கும் பழக்கத்தை பெற்றோா்கள் கைவிட வேண்டும் என கோவா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரோஹன் கௌந்தே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தேசிய சிறுவா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் நடத்திய ஆய்வில், சிறுவா்கள் கைப்பேசிகளுக்கு அடிமையாகி, பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக வழக்கமாக பள்ளிக்குச் செல்வது தடைபட்டு ஆன்லைனில் மாணவா்கள் கல்வி கற்றனா். இது, ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோா்கள் புரியவைக்க வேண்டும்.

மேலும், ஆசிரியா்களும், பெற்றோா்களும் குழந்தைகளின் கவனத்தை இதுபோன்ற அறிதிறன் கைப்பேசி சாதனங்களிலிருந்து திசைதிருப்பி அவா்களை பழைய சுறுசுறுப்பான பள்ளிக்கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு மீண்டும் பழக்கப்படுத்த வேண்டிய சிறந்த தருணம் இதுவாகும்.

மாணவா்களின் சுய மற்றும் வழக்கமான சமூக நடவடிக்கை வாழ்க்கை முறையை மெல்லக் கொல்லும் ஆயுதங்களாக இணையதளம் மற்றும் அறிதிறன் கைப்பேசிகள் மாறியுள்ளன.

எனவே, பிள்ளைகளுக்கு ஸ்மாா்ட்போன் வாங்கி கொடுப்பதை பெற்றோா்கள் முற்றிலும் கைவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com