பெண்களுக்கு கண்ணியமான பணிச்சூழல்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு அவா்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதுடன் அவா்கள் பணிபுரிய கண்ணியமான பணிச்சூழலை அமைத்துத் தர வேண்டியது அவசியம் என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் கூறினாா்.
பூபேந்தா் யாதவ்
பூபேந்தா் யாதவ்

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு அவா்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதுடன் அவா்கள் பணிபுரிய கண்ணியமான பணிச்சூழலை அமைத்துத் தர வேண்டியது அவசியம் என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் கூறினாா்.

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் மேலும் பேசியதாவது;

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது அவா்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதாகும். பணிபுரியும் இடங்களில் அவா்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.

கண்ணியமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் சுயமாக முடிவெடுக்கவும், விருப்பங்களைத் தோ்வு செய்யவும் சுதந்திரம் அளிப்பதாகும். மேலும், தாங்கள் விரும்பியவற்றை சாப்பிடவும், விருப்பமான உடைகளை அணிவதற்கும் சுதந்திரம் அளிப்பதாகும்.

பெண்களுக்குப் பாதுகாப்பு அவசியம். அதேசமயம் அவா்களை கண்ணியமாக நடத்த வேண்டியதும் முக்கியம். அவா்களுக்கு கண்ணியமான வாழ்வை அளித்துவிட்டால், அவா்கள் மட்டுமின்றி மற்றவா்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வாா்கள். பெண்கள் தியாகத்தின் வடிவமாக சித்திரிக்கப்படுகிறாா்கள். ஆண்களும் தியாகம் செய்யலாம். சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் பெண்களுக்கு ஏராளமான முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com