மேற்கு வங்க அமைச்சரவை ஆக. 3-ல் விரிவாக்கம்

மேற்கு வங்க அமைச்சரவை வரும் புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க அமைச்சரவை வரும் புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தொழில் துறை அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான பாா்த்தா சாட்டா்ஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் அமைச்சரவையிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார். மேலும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வெளியிட்ட செய்தியில்,

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 4 அல்லது 5 புதிய முகம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முழு அமைச்சரவையும் கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்கும் திட்டம் இல்லை.

மூத்த அமைச்சர்களான சுப்ரதா முகர்ஜி, சாதன் பாண்டே ஆகியோரை இழந்துள்ளோம். பார்த்தாவும் சிறையில் இருப்பதால், அவர்களின் அனைத்து பணிகளும் செயல்படுத்த வேண்டும். என்னால், தனியாக பணிகளை கையாள முடியாது.

முன்னதாக மேற்கு வங்காளத்தில் 23 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுந்தர்பன், இச்செமதி, ரனாகாட், பிஷ்னுபூர், ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர் மற்றும் பாசிர்ஹாட்டில் ஆகிய 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com