கேரளத்தில் கனமழைக்கு 10 பேர் பலி: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் கடந்த ஞாயிறு முதல் பெய்துவரும் கனமழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தன. 
கேரளத்தில் கனமழைக்கு 10 பேர் பலி: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் கடந்த ஞாயிறு முதல் பெய்துவரும் கனமழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தன. 

செவ்வாய்க்கிழமை காலை கண்ணூரில் உள்ள வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இரண்டரை வயதுக் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், மேலும் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து வடக்கு நோக்கி மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அணைகளிலும் விதி வளைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முடிவுகளை எடுப்பார்கள்.  தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியதாவது: மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன.

மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன, மலை மாவட்டமான இடுக்கியில்தான் அதிக முகாம்கள் உள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com