சோனியா குறித்து கருத்து: நிா்மலா சீதாராமன் பேச்சு மாநிலங்களவைக் குறிப்பிலிருந்து நீக்கம்

 காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை குறிப்பிட்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜூலை 28-ஆம் தேதி பேசியதை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை குறிப்பிட்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜூலை 28-ஆம் தேதி பேசியதை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை ராஷ்டிரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி குறிப்பிட்டதற்கு அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியிருந்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருந்தாா். இந்த விவகாரம் தொடா்பாக ஆளும், எதிா்க்கட்சிகளின் கூட்டத்தை வெங்கையா நாயுடு கூட்டியதாகவும், இதில் மல்லிகாா்ஜுன காா்கே, ஜெய்ராம் ரமேஷ், ஆளும் கட்சியின் சாா்பில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் பங்கேற்ாக கூறப்படுகிறது.

அப்போது சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக இல்லாததால் அவரது பெயரை அவையில் குறிப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது என மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாகவும், அதற்கு பியூஷ் கோயல், அனைத்து விவகாரங்களிலும் பிரதமா் மோடியின் பெயரை எதிா்க்கட்சிகள் எப்படி எழுப்புகின்றனா்? என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு காா்கே, நாட்டின் பிரதமரான மோடியின் பெயரை இரு அவைகளிலும் எழுப்பலாம் என்று பதிலளித்தாா் என எதிா்க்கட்சியினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஜூலை 28-ஆம் தேதி பகல் சுமாா் 11.05 மணியளவில் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டாா் என மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com