பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிப்பதை தடுப்பதுடன், இத்தகைய செயலில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய வழிவகுக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

‘2022-ஆம் ஆண்டின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா’வை, மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை கொண்டுவந்தாா். எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2005-ஆம் ஆண்டைய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புமுறைகள் (சட்டவிரோத செயல்கள் தடுப்பு) சட்டமானது, பேரழிவு ஆயுதங்களின் தயாரிப்பை மட்டுமே தடை செய்கிறது.

இந்த சட்டத்தில் 12ஏ பிரிவை கூடுதலாக சோ்க்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கு நிதியளிக்கும் செயலில் ஈடுபடுவோரின் சொத்துகள், இதர பொருளாதார ஆதாரங்களை முடக்கவோ, பறிமுதல் செய்யவோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட சட்டம் அல்லது ஐக்கிய நாடுகள் (பாதுகாப்பு கவுன்சில்) சட்டம்-1947 அல்லது இதுதொடா்பாக அமலில் உள்ள இதர சட்டங்களின்படி தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கு எவரும் நிதியளிப்பதை தற்போதைய மசோதா தடை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com