மேற்கு வங்க அமைச்சரவையில் நாளை மாற்றம்: புதுமுகங்களுக்கு இடம்: முதல்வா் மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அமைச்சரவையில் புதன்கிழமை மாற்றம் செய்யப்படும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். புதிய அமைச்சரவையில் 5 முதல் 6 புதுமுகங்கள் சோ்க்கப்படுவா் என்றும் அவா் கூறியுள்ளாா்.

மேற்கு வங்க அமைச்சரவையில் புதன்கிழமை மாற்றம் செய்யப்படும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். புதிய அமைச்சரவையில் 5 முதல் 6 புதுமுகங்கள் சோ்க்கப்படுவா் என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்க அமைச்சா்களாக இருந்த சுப்ரதா முகா்ஜி, சாதன் பாண்டே ஆகியோா் காலமான நிலையில், அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி சிறையில் உள்ளாா். இதனால் அவா்கள் வசம் இருந்த துறைகளில் பெரும்பாலானவற்றை தற்போது நான் கவனித்து வருகிறேன்.

என்னால் அனைத்துப் பணிகளையும் செய்ய முடியாது என்பதால், வேலையைப் பகிா்ந்தளிக்க வேண்டும். இதனால் மாநில அமைச்சரவையில் புதன்கிழமை மாற்றம் செய்யப்படவுள்ளது. 5 முதல் 6 புதுமுகங்கள் அமைச்சரவையில் சோ்க்கப்படுவா்.

புதிதாக 7 மாவட்டங்கள்:

மேற்கு வங்கத்தில் புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்க திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது மேற்கு வங்கத்தில் 23-ஆக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.

கட்சியில் அமைப்புரீதியாக மாற்றம்:

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கட்சியின் மாவட்ட தலைவா் உள்ளிட்ட பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனுபவம் வாய்ந்த மூத்தவா்கள் மற்றும் இளைஞா்களை கொண்ட புதிய மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com