30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் இந்தியா வருகை

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை அதிகரித்து வருவதால், குழந்தைகள் உள்பட 30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் புதன்கிழமை தில்லிக்கு வர உள்ளனர். 
30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் இந்தியா வருகை

தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை அதிகரித்து வருவதால், குழந்தைகள் உள்பட 30 ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் புதன்கிழமை தில்லிக்கு வர உள்ளனர். 

காம் ஏர் மூலம் இயக்கப்படும் காபூலில் இருந்து திட்டமிடப்படாத வணிக விமானம் ஒன்று தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர உள்ளது. அவர்களின் வருகைக்குப் பிறகு முழுக் குழுவும் தேசிய தலைநகர் திலக் நகரில் உள்ள குருத்வாரா ஸ்ரீ குரு அஜ்ன் தேவ்க்குச் செல்வார்கள் என்று ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

ஆப்கானில் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, அங்குள்ள சீக்கிய சமூகம் உள்பட மத சிறுபான்மையினர் பலமுறை வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர். 

ஜூலை 14 அன்று 21 ஆப்கானிஸ்தான் கீக்கியர்கள் காபூலில் இருந்து புது தில்லிக்கு மிகப்பெரிய தனியார் ஆப்கானிய விமான நிறுவனமான காம் ஏர் மூலம் வெளியேற்றப்பட்டனர். 

கடந்த ஒரு மாதத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து 32 ஆப்கன் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மறுவாழ்வு பெற விரும்பும் சட்டப்பூர்வ நபர்களுக்கும் எஸ்ஜிபிசி உதவி வழங்கி வருகிறது. அவர்கள் உலக பஞ்சாபி அமைப்பு, சோப்தி அறக்கட்டளை மற்றும் பிற சமூக அமைப்புகளால் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com