தடுப்பூசி திட்டம் நிறைவுக்குப் பிறகு சிஏஏ விதிமுறைகள் உருவாக்கப்படும்- அமித் ஷா தகவல்

கரோனா முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தடுப்பூசி திட்டம் நிறைவடைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருப்பதாக,
தடுப்பூசி திட்டம் நிறைவுக்குப் பிறகு சிஏஏ விதிமுறைகள் உருவாக்கப்படும்- அமித் ஷா தகவல்

கரோனா முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தடுப்பூசி திட்டம் நிறைவடைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருப்பதாக, மேற்கு வங்க பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி கூறினாா்.

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சி தலைவரான அவா், நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். மேற்கு வங்க அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜியை, ஆசிரியா் பணி நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ள நிலையில், இச்சந்திப்பு நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் சுவேந்து அதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தொடா்புடைய திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் சுமாா் 100 பேரின் பட்டியலை உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் வழங்கியுள்ளேன். இதில் சில எம்எல்ஏக்களும் அடங்குவா். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளேன்.

அதேபோல், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்தை விரைவுபடுத்தவும் அவரிடம் கோரினேன். அதற்கு, நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி திட்டம் நிறைவடைந்த பிறகு, சிஏஏ தொடா்பான விதிமுறைகள் உருவாக்கப்படும் என்று அமித் ஷா பதிலளித்ததாக சுவேந்து அதிகாரி தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2019, டிசம்பா் 11-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, 24 மணிநேரத்தில் அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால், உரிய விதிமுறைகள் உருவாக்கப்படாததால், அந்த சட்ட அமலாக்கம் தடைபட்டுள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-க்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய மதச்சிறுபான்மையினருக்கு (ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்தா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்கள்) இந்திய குடியுரிமை வழங்க மேற்கண்ட சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்ால், விதிமுறைகள் உருவாக்கத்தில் மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com