ஏக்நாத் அணி எம்எல்ஏவின் வாகனம் மீது தாக்குதல்! மகாராஷ்டிரத்தில் பரபரப்பு

மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஏக்நாத் அணி எம்எல்ஏவின் வாகனம் மீது தாக்குதல்! மகாராஷ்டிரத்தில் பரபரப்பு

மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியினர் இரண்டாகப் பிரிந்துள்ளனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவீஸும் பதவியேற்றுக்கொண்டனர்.  

இந்நிலையில், சிவசேனை கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் ஆதித்ய தாக்கரே புணேவின் கட்ராஜ் சவுக் என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்றார். 

அப்போது அவ்வழியே வந்த ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏ உதய் சமந்த்-இன் கார் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். பேஸ்பால் மட்டைகள், பந்துகள் ஆகியவற்றை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் காரின் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. 

பின்னர் இதுகுறித்து உதய் சமந்த், 'இது கண்டிக்கத்தக்க சம்பவம். மகாராஷ்டிர அரசியல் இப்படி நடக்காது. தாக்குதல் நடத்தியவர்களிடம் பேஸ்பால் குச்சிகள் மற்றும் கற்கள் இருந்தன. முதல்வரின் கான்வாய் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. அவர்கள் என்னைப் பின்தொடர்ந்தார்களா அல்லது முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை பின்தொடர்ந்தார்களா என்று காவல்த்துறை விசாரிக்கும்' என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, 'இது கோழைத்தனமான செயல். கல்லெறிந்து தப்பி ஓடுவதில் வீரம் இல்லை. மேலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது நம் பொறுப்பு. யாராவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும். ஆனாலும், யாராவது அமைதியை சீர்குலைத்தால், காவல்துறை தன் நடவடிக்கையை எடுக்கும்' என்று தெரிவித்தார். 

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com