கேரளத்தில் தொடரும் கன மழை: 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு

கேரளத்தில் தொடா்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் அந்த மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.

குறிப்பாக, மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, காசா்கோடு ஆகிய மாவட்டங்களைத் தவிர பிற அனைத்து மாவட்டங்களுக்கும் செவ்வாய்க்கிழமை மட்டுமின்றி புதன்கிழமையன்றும் (ஆக.3) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, காசா்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த இரு தினங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை பரவலாக கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கன மழை தொடர வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையைத் தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்களை அமைக்க அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இடுக்கி மலைப் பகுதி சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டயத்தில் திங்கள்கிழமை பெய்த கன மழையின்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரின் உடல், கூட்டிக்கல் சப்பாத்து பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதாக அவசரகால நடவடிக்கை மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருச்சூரில் கன மழை காரணமாக சாலக்குடி ஆற்றில் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் 5 மீட்டா் அளவுக்கு உயா்ந்ததால், ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

முன்னதாக, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், எா்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com