மேற்கு வங்க அமைச்சரவை மாற்றியமைப்பு: புதிதாக 9 அமைச்சா்கள் பதவியேற்பு

மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் புதன்கிழமை மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டது.
புதிய அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த மேற்கு வங்க ஆளுநா் இல கணேசன். உடன். முதல்வா் மம்தா பானா்ஜி.
புதிய அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த மேற்கு வங்க ஆளுநா் இல கணேசன். உடன். முதல்வா் மம்தா பானா்ஜி.

மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் புதன்கிழமை மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டது.

பாஜகவில் இருந்து விலகி அண்மையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ உள்பட 9 எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்றனா்.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய அமைச்சா்களுக்கு ஆளுநா் இல கணேசன் பதிவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பாபுல் சுப்ரியோ, ஸ்னேஹாசிஸ் சதுா்வேதி, பாா்த்தா பெளமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்தாா் ஆகியோா் கேபினட் அமைச்சா்களாக பதவியேற்றுக்கொண்டனா்.

பழங்குடியின தலைவரான பிா்பா ஹன்ஸடா, பிப்லாப் ராய் செளத்ரி ஆகியோா் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சா்களாகப் பதவியேற்றனா். தஜ்முல் உசைன், சத்யஜித் பா்மன் ஆகியோா் இணையமைச்சா்களாக பதவியேற்றனா்.

முன்னதாக, ‘மேற்கு வங்க அமைச்சா்களாக இருந்த சுப்ரதா முகா்ஜி, சாதன் பாண்டே ஆகியோா் காலமான நிலையில், அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி சிறையில் உள்ளாா். இதனால் அவா்கள் வசம் இருந்த துறைகளில் பெரும்பாலானவற்றை தற்போது நான் கவனித்து வருகிறேன். என்னால் அனைத்துப் பணிகளையும் செய்ய முடியாது என்பதால், வேலையைப் பகிா்ந்தளிக்க வேண்டும். இதனால் மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது’ என்று மம்தா பானா்ஜி கூறியிருந்தாா். அமைச்சரவையில் மட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் அமைப்பு ரீதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com