ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் மனுவை விசாரிக்க ஒப்புதல்

ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு
ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் மனுவை விசாரிக்க ஒப்புதல்

ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த ஜூலை 26-ஆம் தேதி பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகளில் ஒருவா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் விசாரணை நடைபெறவில்லை.

இதனை குறிப்பிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘விசாரணைக்காக உங்கள் மனு பட்டியலிடப்படும்’ என்று சுப்பிரமணியன் சுவாமியிடம் புதன்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தின் தென்கிழக்கு கடற்பகுதியில் உள்ள பாம்பன் தீவுக்கும் இலங்கையின் வடமேற்கு கடற்பகுதியில் உள்ள மன்னாா் தீவுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தாா்.

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான பொது நல வழக்கையொட்டி, அவா் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘ராமா் பாலத்தின் இருப்பை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அது எனக்கு கிடைத்த முதல் வெற்றி. ஆனால், ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை பரிசீலிக்க சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஏற்பாட்டில் கடந்த 2017-இல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை’ என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தாா்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கப்பட்ட சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு கடந்த 2007-இல் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, சேதுசமுத்திர திட்டத்தின் சமூக-பொருளாதார சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு, ராமா் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராமா் பாலம் விவகாரத்தில் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அரசு பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com