பாலமும் இல்லை, பள்ளிக்கும் செல்ல வேண்டும்.. வேறு வழி

நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள், 8 வழிச் சாலைகள், தேசிய நெடுங்சாலைகள் என்று நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக நாள்தோறும் செய்திகளைப் படிக்கிறோம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்


நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள், 8 வழிச் சாலைகள், தேசிய நெடுங்சாலைகள் என்று நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதாக நாள்தோறும் செய்திகளைப் படிக்கிறோம்.

ஆனால், இன்னமும் பல கிராமங்கள், இந்த நாட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் வழியில்லாமல், போக்கிடமும் இல்லாமல், போக வர வழியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதும் இன்னமும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

அதுபோன்ற எண்ணற்றப் பகுதிகளில் தற்போது ஊடகத்தின் வெளிச்சம் பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தின் பெத் தாலுகாவிலிருக்கும் ஒரு கிராமத்துக்கு சாலையோ, பாலமோ இல்லாமல், நாள்தோறும் ஆற்றைக் கடந்துதான் வெளியே செல்லும் நிலையில் உள்ளனர்.

பள்ளிச் செல்லும் குழந்தைகளின் நிலைமையோ பரிதாபம். அவர்களது ஆடைகளும் நீரில் நனையாமல், ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருவதே மிகப்பெரிய சாதனைதான்.

பள்ளிச் செல்லும் பிள்ளைகளுக்கு அந்த ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் நாள்தோறும் உதவி வருகிறார்கள். ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு பிள்ளைகளை பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பணியை அவர்களை மேற்கொள்கிறார்கள். பள்ளிச் செல்ல வேண்டும் என்றால் இது ஒன்று மட்டுமே வழி என்கிறார்கள் கிராம மக்கள்.

ஏராளமான பிள்ளைகளின் பெற்றோர்களும் பிள்ளைகளை தங்களது தோளில் சுமந்து ஆற்றைக் கடந்து அக்கரையில் விட்டுவிடுகிறார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் இப்படித்தான் பிள்ளைகள் ஆற்றைக் கடக்கிறார்கள்.

ஆறும் ஆழமாக இருக்கிறது. பிள்ளைகளும் பள்ளிச் செல்ல வேண்டுமே. அதனால்தான் நாங்களே தோளில் சுமந்து கொண்டுச் செல்கிறோம். மாவட்ட நிர்வாகத்திடம் பாலம் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம் என்கிறார்கள்.

மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் அடித்துக் கொண்டு போகும் போது அது தேர்வாக இருந்தாலும் கூட பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. அப்போது ஒரு மாத காலத்துக்கு மேல் அவர்கள் கல்வி பாதிக்கப்படும்.

பல ஆண்டுகளாக நாங்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாலையோ பாலமோ இதுவரை போடப்படவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களோ, தங்களது தேர்தல் சுற்றுப் பயணங்கள் நிறைவு பெற்றதும் எங்களையும் மறந்துவிடுகிறார்கள் என்கிறார்கள் மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com