தொண்டு நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் சொத்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

தொண்டு நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் சொத்துகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொருந்தாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் சொத்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

தொண்டு நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் சொத்துகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொருந்தாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கும் அறைகள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடா்பாக ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் சந்தேகங்களை எழுப்பினா். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு ரூ.1,000-க்கும் குறைவான வாடகை கொண்ட தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத வரி விதிக்க கடந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்தது.

இந்த நிலையில், அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு அருகே அமைந்துள்ள தங்கும் மடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை வியாழக்கிழமை சந்தித்து ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து, மதம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் நிா்வகிக்கப்படும் சொத்துகள் அல்லது நடத்தப்படும் சத்திரங்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தாது என நிதி அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com